யெஸ் வங்கியிலிருக்கும் பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு சொந்தமான ரூ.545கோடியை கொடுத்துடுங்க நிதியமைச்சரே…!

 

யெஸ் வங்கியிலிருக்கும் பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு சொந்தமான ரூ.545கோடியை கொடுத்துடுங்க நிதியமைச்சரே…!

சமீப காலமாக வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்வதும், அதை தடுக்க ரிவர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

சமீப காலமாக வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்வதும், அதை தடுக்க ரிவர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலமாக இனி யெஸ் வங்கி எந்த முதலீடு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது. ஆனால் இதனால் முதலீட்டாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

Puri Jagannath Temple

பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு பல்வேறு வழிகளில் வரும் நிதி நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்பட்டு யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யெஸ் வங்கியில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 542 கோடி ரூபாயை விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா நிதி அமைச்சர் நிரஞ்சன் புஜாரி கடிதம் எழுதியுள்ளார்.