யெஸ் இல்லை இனி நோ வங்கி! – ராகுல் விமர்சனம்

யெஸ் இல்லை இனி நோ வங்கி! – ராகுல் விமர்சனம்

வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் எஸ்வங்கியை ரிவர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. சமீப காலமாக வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்வதும், அதை தடுக்க ரிவர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

yes bank

ரிவர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலமாக இனி யெஸ் வங்கி எந்த முதலீடு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது. அடுத்த 30 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், “யெஸ் ஃபேங்க் இல்லை… பிரதமர் மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை குலைத்துவிட்டன. நோ பேங்க்” என்று குறிப்பிட்டுள்ளார்.