யூ-ட்யூப் ல லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!

 

யூ-ட்யூப் ல லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சரியாக கையாளத் தெரிந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் இருந்து, மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சரியாக கையாளத் தெரிந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் இருந்து, மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்.  அன்னி யூஜின் என்ற கேரள பெண்மணி, யூ -ட்யூப் சேனலைப் புதிதாய் 2015ம் ஆண்டு துவங்கினார்.

annie

தனது வீட்டிலேயே செய்து வரும் இயற்கை விவசாய முறைகளைப் பற்றியும், தான் விளைவிக்கும் காய்கறிகளை, பழ வகைகளைப் பற்றியும் தினந்தோறும் வீடியோக்களாக படம் பிடித்து தனது சேனலில் பதிவேற்ற ஆரம்பித்தார் அன்னி யூஜின். அதன் பிறகு  நடந்ததெல்லாம் மாயம் தான். தனது வீடியோக்களின் இடையிடையே பயிர் பாதுகாப்பு பற்றியும், அதிகமாக இயற்கை முறையில் விளைவிக்க கூடிய காய்கறிகளைப் பற்றியும் தகவல்களையும் சேர்த்து சுவாரஸ்யமான வீடியோ தொகுப்புகளாக பதிவேற்ற துவங்கினார் அன்னி. தற்போது இவரது சேனலுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

annie

தன்னுடைய வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்புவதன் மூலமாக மட்டுமே மாதத்திற்கு  லட்சத்துக்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார் அன்னி யூஜின்.