‘யூ-டியூப்’ பார்த்துத் திருடக் கற்றுக் கொண்ட சிறுவர்கள் : 7 லேப்டாப், 4 செல்போன் பறிமுதல் !

 

‘யூ-டியூப்’ பார்த்துத் திருடக் கற்றுக் கொண்ட சிறுவர்கள் : 7 லேப்டாப், 4 செல்போன் பறிமுதல் !

கடைகள் மற்றும் பள்ளிகளில் தொடர்ந்து செல்போன், லேப் டாப் உள்ளிட்டவை திருட்டுப் போவதாகப் பொதுமக்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் என்னும் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பள்ளிகளில் தொடர்ந்து செல்போன், லேப் டாப் உள்ளிட்டவை திருட்டுப் போவதாகப் பொதுமக்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவலர்கள் நடத்திய விசாரணையில், விருதாச்சலம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள் இதில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். 

police

அதன் பின்னர், அந்த மூன்று சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விசாரணையில் அந்த சிறுவர்கள், தங்களுக்கு செல்போன், லேப் டாப் எல்லாம் மிகவும் பிடிக்கும் என்றும் எங்களால் வாங்க முடியாததால் திருடலாம் என்று முடிவு செய்தோம்.

tt

அதன் பின்னர், எப்படி பூட்டை உடைப்பது எப்படித் திருடுவது என்பது குறித்து யூ-டியூபில் பார்த்து நன்றாக கற்றுக் கொண்டோம்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதனையடுத்து, அவர்களை எச்சரித்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 7 லெப்டாப் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.