யூடியூப் மூலம் 55 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி வீடு வாங்கிய 6 வயது சிறுமி!

 

யூடியூப் மூலம் 55 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி வீடு வாங்கிய 6 வயது சிறுமி!

தென் கொரியாவில் யூடியூப் சேனல் மூலம் 6 வயது சிறுமி ஒருவர் மாதம் 30 லட்சம் வருமானம் ஈட்டிவருகிறார்.

சியோலை சேர்ந்த போராம் என்ற 6 வயது சிறுமி, Boram என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். அதில் குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், கார், விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றை எப்படி இயக்குவது என்பன குறித்த விமர்சனங்களை வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இது உலகில் இருக்கும் பல பெற்றோர்களுக்கு பிடித்து போக, இந்த சேனலை அதிகம் சப்ஸ்கிரைப் செய்ய ஆரம்பித்தனர். விலையுயர்ந்த அல்லது சாதரணமான பொம்மை வாங்க வேண்டுமென்றால், போரோமின் ரிவ்யூவிவை பார்த்துவிட்டு வாங்குகின்றனர். அவருக்கு யூடியூபில் 13 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்கள் உள்ளனர். இதன்மூலம் மாதம் 30 லட்சம் வருமானம் வரை சம்பாதிக்கும் அந்த சிறுமி சியோல் பகுதியில் 55 கோடிக்கு 5 மாடி குடியிருப்பை சொந்தமாக வாங்கியுள்ளார். அந்த வீட்டை தனது Boram Family company பெயரில் ரிஜஸ்டர் செய்துள்ளார்.