யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு ஏ.டி.எம்-ல் கொள்ளையடித்த பலே ஆசாமி! – வசமாக சிக்கினார்

 

யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு ஏ.டி.எம்-ல் கொள்ளையடித்த பலே ஆசாமி! – வசமாக சிக்கினார்

யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏ.டி.எம்-ல் கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருநின்றவூரை அடுத்த பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர் உதயசூரியன் (32). இவர் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்துள்ளார். அப்போதே ரூ.40 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார்.

யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏ.டி.எம்-ல் கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

udhayasuriyan

சென்னை திருநின்றவூரை அடுத்த பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர் உதயசூரியன் (32). இவர் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்துள்ளார். அப்போதே ரூ.40 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார். அந்த நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழந்த இவர், பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த சம்பளத்துக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி குறைந்த சம்பள வேலையில் சேர்ந்தார். ஆனால், வருமானம் போதவில்லை. இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு தான் கற்றுக்கொண்ட மின்னணு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த யோசனை தோன்றியது. யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஏ.டி.எம்-ல் திருடுவது எப்படி என்று வீடியோக்களை தேடிப் பார்த்து கற்றுக்கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு பாக்கம் என்ற இடத்திலிருந்த தனியார் வங்கியின் ஏ.டி.எம்-ஐ திறந்து ரூ.4 லட்சத்தை திருடிச் சென்றார். சி.சி.டி.வி கேமரா காட்சிகள் கிடைத்தும் யார் திருடியது என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிப்போயினர்.

atm

இந்த பணத்தை பங்குச் சந்தை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்துள்ளார் உதயசூரியன். மேலும், சுலபமாக பணம் சம்பாதிக்க நல்ல வழி என்று கருதி, காவலாளி இல்லாத ஏ.டி.எம் ஏதும் உள்ளதா என்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோட்டமிட்டு வந்துள்ளார். அதன்படி அருகில் ஒரு ஏ.டி.எம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம்-க்குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்தனர். சந்தேகத்துக்கிட்டமாக ஒருவர் ஏ.டி.எம்-க்குள் இருப்பதை கண்ட அவர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே ஏ.டி.எம்-ல் கொள்ளையடித்த நபர் இவர்தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.