யூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்!

யூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்!

இன்றைய ஆண்ட்ராய்டு  மொபைல் உலகில் வீடியோ பார்ப்பதற்கும் டவுன்லோட் செய்வதற்கும் பல தளங்கள் இருந்தாலும்  வீடியோ என்றால் யூடுப்  என்றாகிவிட்டது. 

யூடியூபில் 18+ விடீயோக்களை தவிர மற்ற விடீயோக்களை பார்ப்பதற்கு  டெஸ்க்டாப் மற்றும் மொபைல் போன்களில் எந்த கூகிள் அக்கௌன்ட்  லாகினும் செய்யவேண்டியதில்லை.

youtube

ஆனால் பெரும்பாலானவர்கள் மொபைல் போன் பயன்படுத்தும் போது காண்டாக்ட் லிஸ்ட் அப்டேட் செய்வதற்கும் பிளே ஸ்டோரில் ஆப்ஸ் டவுன்லோட் செய்வதற்கும் தங்களுடைய கூகிள் அக்கௌன்ட்டை  இணைத்தே பயன்படுத்துகின்றனர்.

யூடுப் ஆப்பை பயன்படுத்தி விடீயோக்களை பார்ப்பதற்கு யூடுப் எந்த வித கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. ஆனாலும் சிலர் சில விடீயோக்களை அடிக்கடி பார்க்க ஆசைப்பட்டு அதனை பிற வெப்சைட்களை  பயன்படுத்தியோ அல்லது பிற ஆப்களை பயன்படுத்தியோ    விடீயோக்களை டவுன்லோட் செய்கின்றனர்.

அப்படியான பயனாளர் ஒருவர் நான் ‘நியூபைப்’  எனும் ஆப்பை பயன்படுத்தி யூடுப் விடீயோக்களை டவுன்லோட் செய்ததால் என்னோடைய கூகிள்  அக்கௌன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டது என பதிவு செய்துள்ளார்.

“எனது கூகிள் கணக்கு நேற்று  சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டது.  முதலில் எனக்கு ‘பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து 3 வது தரப்பு ஆப்களை பயன்படுத்துவதால்  எனது  கூகிள்   அக்கௌன்ட் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது’ எனும் மெயில்  கூகிளில் இருந்து  வந்தது. எனது கூகிள்   அக்கௌன்ட்  லாக் செய்யப்பட்டு விட்டது. பின்னர் நான் வேறு வழி இல்லாமல் எனது மொபைலில்  ‘பேக்டரி ரீசெட்’  செய்து புதிய கூகிள் அக்கௌன்ட்  உருவாக்கி பயன்படுத்துகிறேன்.

google play

பிளே ஸ்டோருக்கு வெளியே நான் பதிவிறக்கிய ஒரே பயன்பாடு ‘நியூபைப்’   தான், எனவே தோழர்களே ஜாக்கிரதை.

எந்தவொரு கூகிள் கணக்கு தகவலையும் கூட ‘நியூபைப்’  பயன்படுத்தவில்லை, ஆனாலும்  அவர்கள் எனது கணக்கை எவ்வாறு இடைநிறுத்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.” என பதிவு செய்துள்ளார்.

-கே.எஸ்.கே.செல்வா