யூடியூபில் இனி தமிழனா இருந்தா ஷேர் பண்ண முடியாது பாஸ்….

யூடியூபில் இனி தமிழனா இருந்தா ஷேர் பண்ண முடியாது பாஸ்….

யூடியூப் வலைதளத்தில் இனி ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு, தெலுங்கனா இருந்தா தள்ளி நில்லு’ போன்ற அபத்தமான விசயங்களைப் பதிவிட்டுவிட்டு காலாட்டிக்கொண்டிருக்க முடியாது. அதில் பகிரப்படும் இனவெறி விவகாரங்களை சென்சார் பண்ணித் தூக்கி எறிவதற்கென்றே ஒரு உயர்மட்டுக்குழுவை யூடியூப் நிறுவனம் விரைவில் நியமிக்க உள்ளது.

யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையை கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும் என்று யூட்யூப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

youtube

நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக யூடியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.இதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.