யூடிபில் புதிய சாதனை படைத்த ‘வாயாடி பெத்த புள்ள ’ பாடல் 

 

யூடிபில் புதிய சாதனை படைத்த ‘வாயாடி பெத்த புள்ள ’ பாடல் 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த டிச.21ம் தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ள இப்படத்தைக் காண இளம் பெண்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுகிறது.

kana

இந்நிலையில்,இப்படத்தில் சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தந்தை-மகள் உறவை சொல்லும் இந்த பாடலில், சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா கொடுத்த அழகான ரியாக்க்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ள சாதனையைப் படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.