யுனிசெஃப்க்கு ஒரு லட்சம் டாலர் நிதியுதவி வழங்கிய கிரெட்டா துன்பெர்க்

 

யுனிசெஃப்க்கு ஒரு லட்சம் டாலர் நிதியுதவி வழங்கிய கிரெட்டா துன்பெர்க்

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் யுனிசெஃப்க்கு ஒரு லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நியூயார்க்: சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் யுனிசெஃப்க்கு ஒரு லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ஒரு டேனிஷ் அறக்கட்டளையில் இருந்து வென்ற 100,000 டாலர் பரிசை கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்காக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதிக்கு (யுனிசெஃப்) வழங்கியுள்ளார் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

UNICEF

காலநிலை நெருக்கடியைப் போலவே, கொரோனா வைரஸ் தொற்றுநோயும் குழந்தைகளின் உரிமைகளுக்கான நெருக்கடி. இது எல்லா குழந்தைகளையும் பாதிக்கும். இப்போது மட்டுமல்ல மற்றும் நீண்ட காலத்திற்கு இது நீடிக்கும். குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கல்வியைத் தொடரவும் யுனிசெஃப்பின் முக்கிய பணிகளுக்கு ஆதரவாக எல்லோரும் என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று 17 வயதான துன்பெர்க் யுனிசெப் அறிக்கையில் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பள்ளி மூடல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிக்க போராடுகையில் உணவு பற்றாக்குறை, சுகாதார பராமரிப்பு அமைப்புகள், வன்முறை மற்றும் இழந்த கல்வி போன்ற துறைகளுக்கு இந்த நிதி ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.