யாஷிகாவுக்கு போஸ்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய மகத்

 

 யாஷிகாவுக்கு போஸ்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய மகத்

மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 2-வில் 16 போட்டியாளர்களுள் கலந்து கொண்டவர்கள் யாஷிகா மற்றும் மகத். முதலில் நட்பாக பழகி வந்த வந்தனர். பின்னர் யாஷிகா,மகத் மீது காதல் வயப்பட்டு வெளிப்படையாக அவரிடம் காதலை கூறினார். ஆனால் மகத் வெளியே தனக்கு காதலி இருப்பதால் நண்பர்களாகப் பழகலாம் என்று சாதுரியமாக பேசி யாஷிகாவைக் கழட்டிவிட்டுவிட்டார். 

அதைத் தொடர்ந்து இருவரும் திரைப்படம் ஒன்றில் ஜோடியாக இணைந்து நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 2’ படத்தை அறிமுக இயக்குநர்கள் மகேஷ், வெங்கடேஷ் இயக்குகிறார். 

இந்நிலையில் நேற்று யாஷிகா தனது 20வது பிறந்தநாளை கொண்டாடினர். அதை முன்னிட்டு அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் மகத் மற்றும் யாஷிகா இருவரும் ரொமான்ஸ் செய்வது போல் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த போஸ்ட்ர் மூலம் நடிகர் மகத், யாஷிகாவிற்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.