“யார கேட்டு என்.ஆர்.சிக்கு ஓட்டு போட்டீங்க.. முஸ்லீம் ஓட்டு போடலனா நீங்க ஜெயிச்சி இருப்பீங்களா”.. அமைச்சர்களைக் கேள்வியால் திணறவைத்த பெண்மணி!

 

“யார கேட்டு என்.ஆர்.சிக்கு ஓட்டு போட்டீங்க.. முஸ்லீம் ஓட்டு போடலனா நீங்க ஜெயிச்சி இருப்பீங்களா”.. அமைச்சர்களைக் கேள்வியால் திணறவைத்த பெண்மணி!

விருதுநகரில் நேற்று தமிழ்நாடு கூட்டுறவு இணையம் சார்பில் பெட்ரோல் பங்க் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகரில் நேற்று தமிழ்நாடு கூட்டுறவு இணையம் சார்பில் பெட்ரோல் பங்க் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டனர். அதில் நலத்திட்ட உதவிகள் வழங்க பட்டதின் போது, தமிழ்நாடு கூட்டுறவு இணையம் சார்பில் ரூ.8 லட்சம் பெறுவதற்காக இஸ்லாமியக் கூட்டுறவுச் சங்கத் தலைவி பாத்திமா என்பவர் மேடை ஏறினார். 

ttn

அப்போது அமைச்சர்களைப் பார்த்து, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக யாரைக் கேட்டு வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டுப்போடவில்லை என்றால் உங்களால் ஜெயித்திருக்க முடியுமா?.. மாநிலங்களவையில்  11 எம்.பி.க்கள் ஓட்டு போடாமல் இருந்தால் இந்த சட்டம் நிறைவேறியிருக்குமா?.. என்று சரமாரியாகக் கேள்வி கேட்டார். அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, இச்சட்டம் பற்றி எந்த பாதிப்பும்  வராது. சிறுபான்மையினர் குறித்து என்.ஆர்.சியில் கேட்கப்பட்டிருக்கும் 3 கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார். அமைச்சர்களை அந்த பெண்மணி தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.