யார் யாருக்கெல்லாம் வீடு-மனை யோகம் உண்டு?

 

யார் யாருக்கெல்லாம் வீடு-மனை யோகம் உண்டு?

ஜோதிட அடிப்படையிலும் வாஸ்து சாஸ்திர அடிப்படையிலும் ஒருவருக்கு வீடு மற்றும் மனை எவ்வாறு அமையும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம் இவை ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.உணவும் உடையும் அன்றாடத் தேவை இவற்றில் நிலைத்திருப்பது இடம், இடம் அமைந்தால் இனியது நடக்கும். வளம் உண்டாகும் என்பது அனுபவமாகும்.

jothisam

புராணங்கள்,இதிகாசங்களில் அரண்மனை மாளிகைகள்,நகரங்கள், கிராமங்கள்,அங்காடிகள், விவசாய நிலங்கள்,தொழிற்கூடங்கள், இல்லங்கள்,தோட்டங்கள்,கோவில்கள் அமைப்பதைப்பற்றிய இலக்கணங்கள் உள்ளன.இவைகளே வாஸ்து சாஸ்திரம் என அறியப்படுகிறது.

தெரிந்தோ தெரியாமலோ வாஸ்துமுறைப்படி கட்டப்படும்போது அந்தவீட்டில் வசிப்பவர்கள்,செல்வந்தர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் வலிமை மிகுந்தவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

கட்டிடம் வாஸ்து முறைப்படி கட்டப்படும்போது பிரபஞ்சத்தில் அளவில்லாமல் கொட்டிக் கிடைக்கும் சூரியனின் சக்தி ,சந்திரனின் சக்தி ,காந்த சக்தி,பிரபஞ்ச சக்தியையும் நம்மால் பூரணமாக பெற முடிகிறது.

ஜாதகத்தில் நான்காம் இடமும் கிரகங்களும்:

ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் ஜன்ம லக்னத்தில் இருந்து நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின்,அவரது ஆயுளின் மத்திய காலத்துக்கு பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு. 

jojdsfdk

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜன்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. 

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும். 

ஜன்ம லக்னத்து நான்காம் வீட்டில் புதன் அமையப்பெற்றிருந்தால்,கலை நயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும். 

jojsdfsfk

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்திம பாகத்துக்கு மேல் அந்திம பாகத்தில் சிறப்பான வீடும், மனை யோகமும் கிடைக்கும். 

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும்.வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். 

ஜன்ம லக்னத்துக்கு 4ஆம் வீட்டில் சனி இருப்பின் சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும். 

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும். 

jobhds

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது.வீடு வாசல் இழப்புகள் ஏற்படும்.பூர்விகச் சொத்து இருந்தாலும் பயன் இருக்காது. 

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் மாந்தி இருப்பின்,செல்வச் செழிப்பு ஏற்படும். ஆனால், மாந்தி அமைந்துள்ள ராசியாதிபதி லக்ன கேந்திரம் பெற வேண்டும். அப்போதுதான் நல்ல வீடுவாசல் அமையும்.

ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் மாந்தியுடன் சம்பந்தப்பட்டால் கிரக தோஷ பரிகாரங்களால் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.பெரும்பாலும் இவ்வாறான அமைப்பு உடையவர்களுக்கு மனை வீடு போன்றவை.ஒரு காலத்தில் களவு,கொலை நடந்த இடங்களிலோ, மயானங்களின் அருகிலோ இயற்கையாகவே அமைந்துவிடும். 

இதேபோன்று கிரகங்களின் பார்வை, சேர்க்கையின் அடிப் படையிலும் சில விளக்கங்களைச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.அதுபற்றி தொடர்ந்து பார்ப்போம்.ஜாதகத்தில் மனை யோகத்தை அறியும் வழிமுறைகள்.

jkoiuy

1. ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டின் அதிபதியான கிரகம் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்று கேந்திரபாவங்களில் அமைந்திருப்பின் நிச்சயம் வீடு,மனை யோகம் ஏற்படும்.

2. நான்காவது பாவாதிபதி பத்தாவது பாவத்திலும் 10- ஆவது பாவாதிபதி நான்காவது பாவத்திலும் பரிவர்த்தனை யோகத்தில் அமையப் பெற்றிருந்தால் எவ்வித தடங்களும் இன்றி வீடு கட்டி வாழும் யோகம் உண்டு. இயற்கையாகவே நல்ல வசதி வாய்ப்புகள் வந்தடையும். 

3. நான்காவது பாவாதிபதி 11 இல் அமைந்திருப்பின் இக்கிரக திசையில் புதிய வீடு கட்டிசெல்லும் யோகம் உண்டு. குறைந்த பட்சம் அழகிய வாடகை வீட்டிற்காவது குடி பெயர்ந்து செல்வர்.

4. நான்காவது பாவத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் வக்ரம் இன்றியும் கெட்ட ஆதிபத்தியம் இல்லாலும் இருப்பின், வீடு வாகன வசதிகள் உண்டாகும். வாடகை வீட்டில் வசிக்க நேர்ந்தாலும் சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான வீட்டில் வசிக்கலாம்.

5. நான்காவது பாவத்தின் அதிபதியான கிரகம், பாவக் கிரகமாக இருப்பினும் அல்லது பாவக் கிரகங்களின் சேர்க்கையைப் பெற்று இருப்பினும், 4 ஆவது அல்லது 10 ஆம் வீடுகளில் அமைந்திருப்பின் வீடு கட்டும் யோகம் உண்டு.

6. சுக்கிரன்,குரு லக்ன பாவத்தில் அல்லது 7 ஆம் வீட்டில் சேர்ந்திருப்பின் நிறைந்த வாழ்க்கை வசதிகள், வீடு லாபம் போன்றவை கிட்டும்.

jojkdcdk

மனிதப் பிறப்பில் அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவரவர் கர்ம வினைப்படி மனிதர்களின் வாழ்க்கை அமையும்.ஆகவே வாஸ்துவின் அமைப்பைப்பொருத்தே, வாழ்க்கையின் தரமும் அமையும்.அதன்படி எந்தெந்த திசையில் என்ன,என்ன அறைகளைஅமைப்பது வாஸ்து சாஸ்திரப்படி நன்மை பயக்கும் என்பதை பற்றி பார்போம். 

கிழக்கு – குடிநீர்,தென் கிழக்கு – சமையலறை, தெற்கு – படிப்பறை மற்றும் படுக்கையறை,மேற்கு – சந்தததியர் படுக்கை அறை,வடமேற்கு – கழிவறை,கழிவு நீர் தொட்டி அமைப்பு,வடக்கு – குபேரனது திசை,வடகிழக்கு- இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

jokddk

அலுவலக அறை வடமேற்கு திசையிலும் ,புத்தக அறை தென்மேற்குத் திசையிலும்,சமையல் அறை தென் கிழக்குத் திசையிலும், உணவு புசிக்கும் அறை தெற்குத் திசையிலும்,படுக்கை அறை மேற்குதிசையிலும்,வடகிழக்குத் திசையில்,பூஜை அறையும்,குளியல் அறை கிழக்கு திசையிலும்,சேமிப்பு அறை வடக்கு திசையிலும்,கழிவறை வட மேற்கு திசையிலும் அமைவது வாஸ்து சாஸ்திரப்படி மிகுந்த நன்மை பயக்கும்.

எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். 

jobjddk

ஆகவே வீடு வாங்கும் போது புது மனையின் வாசற்கதவு, கிழக்கைச்சார்ந்த வடகிழக்கு, வடக்கைச்சார்ந்த வடகிழக்கு, தெற்க்கைச்சார்ந்த தென்கிழக்கு, மேற்கைச்சார்ந்த வடமேற்கிலும் நுழைவாயிலை அமைத்தால் நல்ல சக்திகள் நுழைந்து நமக்கு சுபப்பலன்களைக்கொடுக்கும்.

பூஜை அறை: 

 

jobjjck

கோவிலில் பிரம்மஸ்தானம் கொடி மரம்,பலிபீடமும் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வீட்டின் மையப்பகுதியில் அமைப்பதே அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

ஈசான மூலை:

ஈசான்ய மூலை (வடகிழக்கு) வழியே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.ஈசான்ய மூலையில் பூஜையறை, குழந்தைகளின் படிப்பறை, படுக்கையறைகளை அமைக்கலாம்.வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம்.

 

jobkddj

அக்னி மூலை:

அக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற் கூடம் இருக்க வேண்டும்.பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு கிழக்குப்பார்த்து சமைக்கும் படி பார்த்துக்கொள்ளவும். 

நைருதி மூலை:

நைருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, பீரோ,கஜான, தானியக்கிடங்கு,அலமாறி,பரண், எஜமானர்களின் படுக்கை அறை போன்றவைகளை வைக்கவும் சிறந்த இடமாகும்.மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வடக்குத் திசையில் தலை வைத்துத்தூங்கக் கூடாது. 

jobkdfdfkl

வாயு மூலை:

கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும்,தென்கிழக்கு (அக்னி) மூலையில் அமைக்கவும், சில இடங்களில் விதிவிலக்காக கிழக்கிலும் கழிப்பறைகளைஅமைக்கலாம்.

மாடிப்படிக்கட்டு:

மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,கிழக்கு பக்கங்களை அடைக்கும் படி அமைக்கக்கூடாது. தெற்கிலிருந்து வடக்காகவும்,மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.