யார் முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் : முதலமைச்சர்

 

யார் முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் : முதலமைச்சர்

தென்காசி மக்களின் 33 ஆண்டுக் கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை முதல்வர் நேரில் சென்று திறந்து வைப்பார் என்று அறிவிப்பு வெளியானது.

EDAPADI

அதன் படி, இன்று தென்காசி மாவட்டத்தைத் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக அமைச்சர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

edapadi

அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசியை நெல்லை மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்று தென்காசி மக்களின் 33 ஆண்டுக் கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

EDAPADI

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலை நடக்க விடாமல் பலர் முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர். ஆனால், அனைத்து தடைகளையும் மீறி உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தலுக்கும் புது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செண்பக வள்ளி அணை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.