யார் பேச்சையும் கேட்க மாட்டேன்… ராஜேந்திரபாலாஜி அடாவடி முடிவு..!

 

யார் பேச்சையும் கேட்க மாட்டேன்… ராஜேந்திரபாலாஜி அடாவடி முடிவு..!

ரஜினியை அதிமுக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் எதிர்த்து விமர்சித்துப்பேச ராஜேந்திர பாலாஜி மட்டும் வெறித்தனமான ரசிகரைப்போல ஆதரவாகப்பேசினார்.

ரஜினியை அதிமுக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் எதிர்த்து விமர்சித்துப்பேச ராஜேந்திர பாலாஜி மட்டும் வெறித்தனமான ரசிகரைப்போல ஆதரவாகப்பேசினார். 

அடுத்து, கம்பத்தில் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமாரைத் தாக்க வந்தவர்களை எங்களுக்குத் தடுக்கவும் தெரியும். அவர்களது கைகளை முறிக்கவும் தெரியும். மதக்கலவரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம்” என்று குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் சுபிட்சமாகவும், மக்களுக்கு தொல்லை இல்லாத வகையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆன்மிக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

eps

மேலும், “இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தன்னை இஸ்லாமியர்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் திமுக, அவர்களின் வாக்குகளுக்காக மதவெறி அரசியலைச் செய்துவருகிறது. இஸ்லாமிய இளைஞர்களை திமுக மூளைச்சலவை செய்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ops

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை சந்தித்தார். அப்போது “அமைச்சர்களுக்கு இதுவரை பல முறை வாய்க்கட்டு போட்டும் யாரும் கட்டுப்பட மறுக்கிறார்களே என்று எடப்பாடி பழனிசாமிக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.  மீடியாக்கள்ல பேசுறதைக் குறைச்சுட்டு மாவட்டங்கள்ல வேலையைப் பாருங்க என்று முதல்வர் அமைச்சர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் இதுவரை பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அதை மீறியும் பல அமைச்சர்கள் ஊடகங்களில் பேசிவந்தனர். தற்போது, முதல்வர் கடைசியாக இட்ட உத்தரவு, அமைச்சருக்கான மாண்பு ஆகியவற்றையெல்லாம் மீறி கையை முறிப்போம் எனப் பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆக மொத்தத்தில் யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.