யார் பார்த்த வேலைடா இது…ஒரே போன் காலால் மண்டபத்திலிருந்து வெளியேறிய மணமகன்…புதுமாப்பிள்ளை ரெடி!

 

யார் பார்த்த வேலைடா இது…ஒரே போன் காலால் மண்டபத்திலிருந்து வெளியேறிய மணமகன்…புதுமாப்பிள்ளை ரெடி!

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நடந்த நிலையில் நேற்று காலை இவர்களின் திருமணம் நடைபெற இருந்தது

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்டினம் தாலுக்காவை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. இவருக்கும் எலியூர் கிராமத்தைச் சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும்  6 மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நடந்த நிலையில் நேற்று காலை இவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. 

marriage

காலை முகூர்த்த வேளையில் மணமகளின் தாய் வெங்கடலட்சுமியின் செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர்,  மாப்பிள்ளை பசவராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால்  திருமண மண்டபத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

phone

ஒருகட்டத்தில் பசவராஜூக்கு எங்கள் மகளை கட்டித்தரமாட்டோம் என்று  பாக்யஸ்ரீ குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஆனால் பசவராஜ் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி எவ்வளவோ மன்றாடியும் மறுத்த மணமகள் குடும்பத்தினர், ஆனந்த் என்ற சொந்தக்கார  பையனை  மாப்பிள்ளையாகப் பேசி அதே மண்டபத்தில் திருமணத்தை முடித்தனர்.

யார் பார்த்த வேலைடா இது? என்ற குழப்பத்துடன் அழுகாத குறையாக மண்டபத்திலிருந்து நடையை  கட்டினார்  பசவராஜ் .கடைசி நேரத்தில் திருமணத்தில் குழப்பம் விளைவித்த நபர் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.