யார் எல்லாம் எதிர்க்க விரும்புகிறார்களோ அவங்க எல்லாம் எதிர்க்கலாம்…. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்…. அமித் ஷா உறுதி…

 

யார் எல்லாம் எதிர்க்க விரும்புகிறார்களோ அவங்க எல்லாம் எதிர்க்கலாம்…. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்…. அமித் ஷா உறுதி…

யார் எல்லாம் எதிர்க்க விரும்புகிறார்களோ அவங்க எல்லாம் எதிர்க்கலாம் ஆனால் நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என்பதை சத்தமாக மற்றும் தெளிவாக சொல்வேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடியாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மற்றும் அது குறித்து விழிப்புணர்வு கூட்டங்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று பா.ஜ.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்

அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார் அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க விரும்புவர்கள் எதிர்க்கலாம் ஆனால் நாங்கள் அந்த சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என்பதை சத்தமாக மற்றும் தெளிவாக சொல்வேன். நாங்கள் கிளர்ச்சியை கண்டு பயப்பட மாட்டோம். நாங்கள் அதில்தான் பிறந்தோம்.

மம்தா பானா்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ்

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா? நான் உங்களுக்கு தைரியம் அளிக்கிறேன் குடியுரிமை திருத்த சட்டத்தில் எந்தவொரு பிரிவாவது எந்தவொரு நபரின் குடியுரிமையை பறிக்கிறது என்பதை உங்களால் காட்ட முடியுமா? அவர்கள் வாக்கு அரசியலால் குருடர்களாக இருப்பதால், அவர்கள மக்களை தவறாக வழித்நடத்துகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.