யார் அழகு? தீபிகாவா? ஆலியாவா?

 

யார் அழகு? தீபிகாவா? ஆலியாவா?

பாலிவுட்டில் இப்போது சப்யாசாச்சி எனும் லெஹங்கா என்ற உடையே பேஷனாக வலம் வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டின் பியூட்டி குயின்களான தீபிகா படுகோனும், ஆலியா பட்டும் ஒரே மாதிரியான சப்யாசாச்சி ஆடைகளை அணிந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களில் யாருக்கு அந்த உடை அழகாக இருந்தது என்பது ரசிகர்களின் விவாத பொருளாகியுள்ளது. 

deepika and alaiya

நடிகைகளின் புதிய புகைப்படங்கள், அவர்களின் நியூ லுக், தலைமுடி அலங்காரம், புடவைகள், மேக்கப் நோ மேக்கப் லூக்ஸ் போன்றவை அறிந்து கொள்வதே இன்றைய இளசுகளின் மாபெரும் பொழுதுபோக்காக இருக்கிறது. 

சாப்பக்(Chhapaak) என்ற படத்தில் பிஸியாக நடித்துவரும் தீபிகா படுகோனே, பிங்க் நிறத்தில் போல்கா டிசைன் போடப்பட்டிருக்கும் ஒரு அழகிய சாப்யாசாச்சி ஆடையை அணிந்திருந்தார். அந்த உடைக்கு ஏற்றார்போல் அவர் அணிந்திருந்த ஜாதவ் வளையலும், ஸ்டைலான ஹேர் ஸ்டைலும், மேக் அப்பும் ரசிகர்களின் மனதை இழுக்கும்வண்ணம் அமைந்திருந்தது. 

deepika and alaiya

இதேபொல் ஆலியாவும், கச்சிதமான பச்சை நிற சப்யாச்சியை அணிந்து இருந்தார். இவைகளுடன் ஆலியா அணிந்திருந்த காதணி, சிறிய கருப்பு பொட்டு, லைட் மேக் அப் ஆகியவை அவரது அழகுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் இருந்தது. இருவரும் சப்யாச்சியில் மிகவும் அழகாக இருந்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் அல்ல என்பது அவர்களுக்கே உரித்தான ஸ்டைலிலிருந்து தெரிந்ததாக ரசிகர் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.