யார் அந்த நரசிம்மா ரெட்டி? மிரட்டலாக வெளியானது சைரா நரசிம்மா ரெட்டி டீஸர் 

 

யார் அந்த நரசிம்மா ரெட்டி? மிரட்டலாக வெளியானது சைரா நரசிம்மா ரெட்டி டீஸர் 

சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சென்னை: சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தமிழ் சினிமாவில் வரலாற்றுப் படங்களுக்கு என்றே ஒரு தனி வரவேற்பு உள்ளது. ஆனால் அப்படிப் பட்ட படங்கள் மிக குறைவாகவே வெளியாகிறது. ஆனால் அப்படி வரும் படங்கள்  கண்டிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. 

அந்த வகையில் தற்போது சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக  உருவாகிவரும் படம் சைரா நரசிம்மா ரெட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகிவரும் இதில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, நயன்தாரா, கிச்சா சுதீப், தமன்னா, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுமார் 1.42 நிமிடம் உள்ள இதில் முழுக்க முழுக்க சிரஞ்சீவி தான் போர்க்காட்சிகளில் தோன்றுகிறர்.  அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் அங்கங்கே வந்து செல்கின்றனர். டீஸர் வைத்து பார்த்தால் கண்டிப்பாக இந்த படம் ஃபாக்ஸ் ஆபிஸ் வரலாற்றுச் சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.