யார்க்கர் வீசிய கட்சிகள், ஃப்ரீ ஹிட் குடுத்த தேர்தல் கமிஷன்

 

யார்க்கர் வீசிய கட்சிகள், ஃப்ரீ ஹிட் குடுத்த தேர்தல் கமிஷன்

காணாமல் போன கிணற்றை தேட முடியாமல், இன்ஸ்பெக்டராக இருந்து ஏட்டாக டீமோட் ஆகும் போலிஸ்காரர் நிலைமையில் தவிக்கிறது தேர்தல் ஆணையம். காரணம் என்னன்னா, மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்குமான அரசியல் சண்டை, மேற்கு வங்க தேர்தல் களத்தை வன்முறை களமாக்கி வருகிறது.

காணாமல் போன கிணற்றை தேட முடியாமல், இன்ஸ்பெக்டராக இருந்து ஏட்டாக டீமோட் ஆகும் போலிஸ்காரர் நிலைமையில் தவிக்கிறது தேர்தல் ஆணையம். காரணம் என்னன்னா, மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்குமான அரசியல் சண்டை, மேற்கு வங்க தேர்தல் களத்தை வன்முறை களமாக்கி வருகிறது. இரு கட்சியின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டர்கள் என ஒருவர்விடாமல் நரம்பெல்லாம் முறுக்கேறி போய் இருக்கிறார்கள். மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு தன் அத்தனை அதிகாரத்தையும் பயன்படுத்தி வேகெமெடுக்க பார்க்க, எங்க வேணும்னாலும் வச்சிக்க, வங்கத்துல வச்சிக்காதே என மம்தாவும் மல்லுகட்டுக்கு தயாராக இருக்கிறார்.

bjp

 

ஏழாவது கட்டமாக மேற்கு வங்கத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் வாக்குப்பதிவு வருகிற ஞாயிறு நடைபெற உள்ளது. அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக, அதாவது வெள்ளிக்கிழமை மாலையோடு பிரசாரம் முடிய வேண்டியது. ஆனால், இரு கட்சிகளும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதால், வேறு வழியின்றி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்திய தேர்தல் ஆணையம், ஒரு நாளுக்கு முன்னமே அதாவது வியாழக்கிழமை மாலையோடு பிரசாரத்திற்கான நேரம் முடிவதாக அறிவித்துவிட்டது.

election commission

ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்ததாக கூறி, மேற்கு வங்க காவல் அதிகாரி, முதன்மை செயலர் என அதிகாரிகள் சிலரையும் தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைத்து, தேர்தல் சம்பந்தமாக யாரும் அவர்களுடன் அன்னம் தண்ணி புழங்க கூடாது என தீர்ப்பு சொல்லிவிட்டது. “மாரியாத்தா மாரியாத்தா, தேர்தல் முடிகிற வரைக்கும் ரெண்டு குரூப்பையும் கொஞ்சம் கன்ட்ரோல்ல வச்சேன்னா, நடந்தே வந்து மொட்டை போட்டுக்கிறேன்” என தேர்தல் ஆணையர் வேண்டுதல் வைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்.