யாரோ சந்தோசமா இருக்க…ரோட்டுல போறவனெல்லாமா உசுர கையில பிடிச்சுக்கிட்டு போக முடியும்..!? 

யாரோ சந்தோசமா இருக்க…ரோட்டுல போறவனெல்லாமா உசுர கையில பிடிச்சுக்கிட்டு போக முடியும்..!? 

உணவை சமைச்சு சாப்பிடறதைவிட ஆன் லைனில் ஆர்டர் பண்ணி சாப்பிடும் கலாச்சாரம் ரொம்பவே அதிகரிச்சிருச்சு.அதே மாதிரி டெலிவரி பண்ணுகிற கம்பெனிகளுக்குள்ளும் போட்டி அதிகரிச்சிருச்சு என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.முதன் முதலாக ஸ்விக்கிதான் இந்த மார்க்கெட்டில் களம் இறங்கிய கம்பெனி.

swiggy

அதன் பிறகு ஜூமாட்டோ,யூபெர் என்று ஹோட்டல்களைவிட டெலிவரி பண்ற கம்பெனிகள் அதிமாகியிருக்கக்கூடும் என்பதை சந்தேகிக்கவும் முடியாது.நீங்கள் ரோட்டில் போகும் போதே விதவிதமான ஆட்களைப் பார்க்கலாம்.இப்போ போட்டியை சமாளிக்க யார் விரைவாக டெலிவரி கொடுக்கிறார்கள் என்பதில் ஆரம்பித்திருக்கிறது இவர்களுக்கான சண்டை!

swiggy

அதனால்,ஹெல்மெட்  போடுறது கிடையாது ,சாலை விதிகளை சுத்தமாக மதிக்கிறதில்லை ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உண்டு.இந்த நிலையில்  இந்த  மாதிரி  போகிற  டெலிவரி ஊழியர்கள் 616 பேர் மீது போக்குவரத்து போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.சாலைகளில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்குவதால் மெதுவாகச்  செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதாக புகார் குவிந்ததை அடுத்தே காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது!