யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்க வேண்டும் என விஜய் குறிப்பிட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்பைதான்!  – அதிமுக எம்.எல்.ஏ

 

யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்க வேண்டும் என விஜய் குறிப்பிட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்பைதான்!  – அதிமுக எம்.எல்.ஏ

யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்க வேண்டும் என விஜய் பேசியது அமெரிக்க அதிபர் டிரம்பைதான் என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்துள்ளார். 

யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்க வேண்டும் என விஜய் பேசியது அமெரிக்க அதிபர் டிரம்பைதான் என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, “திமுக என்றாலே பெண்களுக்கு எரிச்சல் வருவது இயல்பு. அதிமுக தொண்டன் இயல்பாக இருப்பான். திமுக தொண்டன் டெரராக இருப்பான்.பிரியாணி கடைக்கு சென்று சண்டையிடுவதும், பீயூட்டி பார்லருக்கு சென்று பெண்களை தாக்குவது, சங்கிலி பறிப்பது உள்ளிட்டவைகளை செய்பவர்களாக திமுகவினர் உள்ளனர். நடிகர் விஜய் பேசியது கடந்த பத்து நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. நடிகர் விஜய் சரியாகத்தான் சொல்லிருக்கிறார். அவர் ஸ்டாலின் மகன் உதயநிதியை இளைஞரணி பொறுப்பில் அமர வைத்ததை தான் நடிகர் விஜய் அவ்வாறு பேசி உள்ளார்

நடிகர் விஜய்யோ, அஜய்யோ, ரஜினியோ யாராக இருந்தாலும் பேசுவார்களே தவிர உதவி செய்ய வருவார்களா?புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் 100 நாட்கள் மேல் ஓடியது. ஆனால் தற்போது விமர்சனம் செய்யும் நடிகர்களின் படங்கள் நூறு நாள் ஓடியதுண்டா. 75 நாட்கள் கூட ஓடவில்லை. மக்களுக்காக உழைத்து, உதவிகளை செய்து அரசியலுக்கு வந்தவர்கள் எம்.ஜிஆர், ஜெயலலிதா

bigil

இன்று அரசியலுக்கு வந்து நாளை முதலமைச்சராகி விடலாம், நம்மை சுற்றி நூறு போலீஸ் காவலுக்கு வருவார்கள் என எண்ணும் அந்த நடிகர்களின் கனவு பலிக்காது. முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சர்கார் படத்தில் நடிகர் விஜய், ஜெயலலிதாவின் திட்டத்தை மாசுப்படுத்தி பேசியிருப்பதை நாங்கள் அமைதியான முறையில் எதிர்த்தோம். 

நடிகர் விஜய் கூறிய யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே உட்கார வைக்க வேண்டும் என்ற கருத்தை பரவலாக பார்க்கிறேன். நடிகர் விஜய் அமெரிக்க அதிபர் டிரம்பை குறிப்பிட்டு கூட அவ்வாறு பேசியிருக்கலாம். அமெரிக்காவிலும் அவர் படத்தை வெளியிட்டு வருவதால் எந்த நோக்கத்தில் பேசினார் எனத்தெரியவில்லை” என்று கூறினார்.