யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைங்க! விஜயின் கருத்துக்கு விளக்கமளித்த சீமான்!!

 

யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைங்க! விஜயின் கருத்துக்கு விளக்கமளித்த சீமான்!!

நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. 

நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் வேட்பாளர் பெயர் 25ஆம் தேதி அறிவிக்கப்படும். பிரச்சாரம் அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும். தன் மதிப்பு மிக்க வாக்கு உரிமையை விற்கும் அளவிற்கு செல்வது மக்கள் தவறல்ல ஆட்சியாளர்கள் மீது தவறு. இந்த தேர்தலை திடீர் என்று அறிவித்திருக்கிறார்கள். இதை எப்பவோ நடத்தி முடித்து இருக்க வேண்டும்.

யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைக்க வேண்டும் என்ற விஜய் கருத்துக்கு பதில் அளித்த அவர்,  சரியான தலைவர்களை தேர்வு செய்ய தடுமாறியதால் தான் இந்த தவறு நடந்து கொண்டு இருக்கிறது, மக்களுக்கு அரசியல் தெளிவு விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதை தான் விஜய் கூறுகிறார்.

seeman

குத்திக் கொலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கத்தியை செய்து கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். ஆயிரம் பதாகைகள் வைத்தால் ஒரு பதாகை விழத்தான் செய்யும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார். மதிப்புமிக்க ஒரு உயிரை அற்பமாக பேசுவது ஆபத்தானது அதுவும் பொறுப்புள்ள இடத்தில் இருந்து பேசுவது தவறு. உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் விழுந்திருந்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா? 

ஒரு சரியாக தலைமை இல்லாததால் தான் இந்த பிரச்சனை எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரும் வாக்கு செலுத்தவில்லை ஜெயலலிதாவிற்கு தான் வாக்களித்தார்கள் விபத்தாக முதலமைச்சர் ஆகிவிட்டார். யார் வேண்டுமானாலும் வந்து விடலாம் என்ற அமைப்பு தான் தவறாக இருக்கிறது இதை தான் விஜய் கூறுகிறார்” எனக்கூறினார்.