யாரெல்லாம் நண்பர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

 

யாரெல்லாம் நண்பர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் இன்று அதிக களைப்படைய நேரும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.

22-8-2019 (வியாழக்கிழமை)
நல்ல நேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 1.30 மணி முதல் 3.00 வரை
எமகண்டம்
காலை 6  மணி முதல் 7.30 வரை 
சூலம் — தெற்கு
பரிகாரம் — தைலம்

மேஷம் 
இன்று உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் சவால் என்பதை உணருங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால், இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம் தான் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் 
எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் இன்று அதிக களைப்படைய நேரும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நஷ்டம் நிச்சயம். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். 
அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் 
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும் போது, உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் குற்றம் காண்பார்கள். நண்பர்களிடமும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. உங்கள் வாழ்க்கை கடினமாகும். மற்றவர்களின் தலையீட்டால் உரசல்கள் ஏற்படும். 
அதிர்ஷ்ட எண்: 1

கடகம் 
உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும். ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். இன்றைய பயணங்கள் நிச்சயம் பலன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் 
ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம், அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
அதிர்ஷ்ட எண்: 3

கன்னி 
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார்கள். இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட எண்: 1

துலாம் 
தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இன்றைய நாளை பிரகாசமாக்கும். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் 
உணர்ச்சிக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். அது உங்கள் குழந்தையின் நலனை பாதிக்கலாம். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும்.  முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள். யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால், அவர்களைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 5

தனுசு 
வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் ஆர்வத்தை சோதியுங்கள். உங்கள் மனப்போக்கை இம்ப்ரூவ் பண்ணுவதற்கு வாழும் கலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கற்றுக் கொடுக்கும் யோகா முறையின் உதவியை நாடுங்கள். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் உடன் யாரும் இல்லாவிட்டால், உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிடையாது. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட எண்: 2

மகரம் 
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. புதிய திட்டம் மற்றும் செலவுகளை கொஞ்சம் காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் 
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும், வீட்டில் அதிருப்தியும் மனதில் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மாலையில் விருந்தினர்கள் வருகை புரியலாம். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால்,  இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம் தான் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9

மீனம் 
மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும். கவனமின்மையால் இன்று நிச்சயமாக சில இழப்புகள் ஏற்படும். எதிலும் கவனமாக இருங்கள். பேசும் வார்த்தைகளுக்கு நீங்கள் தான் அதிபதி. இன்று உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7