யாரெல்லாம் தீபாவளி நோன்பு இருக்க வேண்டும்?

 

யாரெல்லாம் தீபாவளி  நோன்பு இருக்க வேண்டும்?

dsfsf

தீபாவளிக்கு அடுத்த நாள் கடைப்பிடிக்கும் நோன்புக்கு கெளரி நோன்பு என்று பெயர். பொதுவாக கெளரி நோன்பு இருக்கும் போது, நோன்பு முடியும் காலம் வரையில் விரதம் இருக்க வேண்டும். யார் எல்லாம் இந்த கெளரி நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரியுமா?இது ஏதோ பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டிய நோன்பு கிடையாது.

deep

ஆண், பெண் என்று யார் வேண்டுமானாலும் இந்த நோன்பினைக் கடைப்பிடிக்கலாம். திருமணமான பெண்கள் தங்களது மாங்கல்யம் தொடர்ந்து மங்களமாக இருக்க பிரார்த்தனைச் செய்துக் கொண்டும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இந்த விரதத்தினை தொடங்குவார்கள்.  மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் விரதம் இருக்கலாம்.

deep2

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள் தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வார்கள். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தீபாவளிக்கு அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி, மானசீகமாக கடவுளை வழிபட்டு விரதத்தை துவங்க வேண்டும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மங்களகரமான வாழ்க்கை கிடைப்பதோடு சந்ததிகளுக்கும் நல்ல சம்பத்துக் கிடைக்கும். வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை விட, அதற்கு அடுத்த நாள் கெளரி நோன்பு மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.