யாரெல்லாம் சினிமாவில் புகழ் பெறுவார்கள்?

 

யாரெல்லாம் சினிமாவில் புகழ் பெறுவார்கள்?

ஜோதிட அடிப்படையில் யாரெல்லாம் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

பூமி, சூரியனைச் சுற்றிவரும் சூரியப் பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றி வரும் அதேபோன்ற பாதையின் விரிவுபடுத்தப்பட்ட நிலையும், சந்தித்துக் கொள்ளும்,அல்லது வெட்டிக் கொள்ளும் இரண்டு புள்ளிகள்தான் ராகு,கேதுக்கள் என அழைக்கப்படுகின்றன.

ragu

ராகு,கேதுக்களை மிக நுட்பமாகவே பிரித்தறிய வேண்டும்.சந்திரனின் ஏறு பாதையில் உள்ள ராகுவிற்கென்று சில தனிப்பட்ட குணங்களும்,இறங்கு பாதையில் உள்ள கேதுவிற்கென்று சில குணங்களும் உள்ளன.ஒருவருக்கு ராகு திசை அல்லது சுக்கிரதிசை நடைபெறும் காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்கும் மற்றும் தொலைக்காட்சி போன்ற நேரடி ஊடகங்களில் தோன்றுதல் போன்றவைகளைச் செய்ய வைப்பவர் ராகு பகவான் தான்.

ஒருவருக்கு ராகு, சுக்கிரன் மற்றும் சந்திரனைத் தொடர்பு கொண்டு, அவர்கள் சம்பந்தம் பெற்று அல்லது ராகு அவருக்குரிய நல்ல பாவங்களில் அமர்ந்திருந்தால் ராகுவின் திசையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபலமடையும் யோகம் கிடைக்கும்.

lakshmiukk

உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து ஐந்து ,ஒன்பது, மூன்று ,ஏழு, பதினொன்று, இரண்டு, பனிரெண்டு, ஆகிய இடங்களில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருந்தால் நீங்கள் நடிப்பு துறையில் புகழ் பெற்றவராக வர வாய்ப்புள்ளது.குருவோடு சூரியன் சேர்ந்திருந்தாலும் இந்த வாய்ப்பு உங்களுக்கு கண்டிப்பாக கிட்டும். 

அதே போல குரு இருக்கும் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் திரைப்பட இயக்குனராக வளருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குரு கிரகத்திலிருந்து ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ,ஒன்பது ,பதினொன்று ஆகிய இடங்களில் சுக்கிரனும் சந்திரனும் இருந்தால் நீங்கள் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியராக வர வாய்ப்பு உள்ளது .

perumal

இதே போல குரு இருக்கும் இடத்திலிருந்து மூன்று, ஏழு,பதினொன்று, ஆகிய இடங்களில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருந்தால் திரைப்பட கவிஞனாக வலம் வருவீர்கள்.இசை அமைப்பாளராக வருவதற்கு குரு இருக்கும் இடம் முதல் ஒன்று, ஐந்து,ஒன்பது, ஆகிய இடங்களில் சுக்கிரனும் ராகுவும் அல்லது சுக்கிரனும் ,சூரியனும் இருக்க வேண்டும் பாடகராக வருவதற்கு இரண்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் சுக்கிரனும்,புதனும் இருக்க வேண்டும் என்று நம்முடைய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றது.

இது தவிர பாட்டு குழுவினர், ஒளிப்பதிவாளர் ,தயாரிப்பாளர், பட தொகுப்பாளர் ,சண்டை பயிற்சியாளர், விநியோகஸ்தர் ,விளம்பரத்தாரர்,திரை அரங்கு உரிமையாளர், இவர்களின் ஜாதகங்களில் குரு சுக்கிரன் செவ்வாய் புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தோ சம்மந்தப் பட்டோ இருக்கும் இவர்கள் நிச்சயமாக சினிமாவை மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களாக இருப்பார்கள் 

murugar

ஒரு சர ராசியில் (மேஷம், கடகம், துலாம், மகரம்) ராகு இருந்து, அந்த பாவம் லக்னத்திற்கு 3, 11 மிடங்களாக அமைந்து, அந்த ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்று, ஐந்து அல்லது ஒன்பதுக்குடையவன் சாரத்தில் இருக்கும் ராகுவின் திசை வருமானால் அந்த ஜாதகர் ஏழ்மையான நிலையில் பிறந்திருந்தாலும் மறைமுகமான வழியில் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிப்பார் என்பது உறுதி.எப்போதுமே ராகுவின் திசை நடந்து கொண்டிருக்கும் பொழுது,ராகுதசை,சுக்கிர புக்தியில் இருந்து ஒரு திருப்பம் ஏற்படும்.