யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள்.. மத்திய அரசு விளக்கம் !

 

யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள்.. மத்திய அரசு விளக்கம் !

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நடவடிக்கையின் போது இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதி செய்யப் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். 

தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

TTN

இந்நிலையில், யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள், யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நடவடிக்கையின் போது இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதி செய்யப் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். 

TTN

2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி ஒருவரின் தாயோ அல்லது தந்தையோ இந்தியாவில் பிறந்திருந்தால் அவர் இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவர். 1987 ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் பிறந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் இந்தியர்களாகக் கருதப்படுவர். இது அசாமில் மட்டும் 1971 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.சியின் போது குடியுரிமை நிரூபிக்கச் சான்றிதழ் இல்லாதவர்கள், அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சியங்களின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இது தொடர்பான மொத்த விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.