யாரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது அத்தியாவசிய தேவைகளுக்கு மாவட்ட உதவி எண்களை அழையுங்கள் – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

யாரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது அத்தியாவசிய தேவைகளுக்கு மாவட்ட உதவி எண்களை அழையுங்கள் – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் தவிர வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் தவிர வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

நாளை முதல் குன்றத்தூர்,மாங்காடு,ஸ்ரீபெரும்புதூர்,வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டைவிட்டு வெளி வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்றியமையாத தேவைகளுக்கு மாவட்ட உதவி எண்களை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் அதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தால் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் பால்  மற்றும் சுகாதாரம் வசதிகள்  போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சி நகரின் 51 வார்டுகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக செயல்பட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பொருட்களை வாங்குவதற்கு வீட்டை விட்டு ஒரு முறை மட்டும் வெளியே சென்றுவர இளம் சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை ஆரஞ்சு நிற அட்டைகள் குடும்பத்திற்கு தலா ஒரு அட்டை வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்ட தேதிகளில் வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை பெற்று செல்லலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

பொதுமக்களுக்கு இன்றியமையாத மருத்துவ சேவை தேவை ஏற்படும் எனில் மாவட்ட சேவை தொடர்பு எண்ணில் தொடர்புகொண்டு மாவட்ட நிர்வாக உதவிகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்