யாரும் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை! கடந்த கால தவறுகளை சரி செய்துவிட்டோம்- அமித் ஷா தகவல்…

 

யாரும் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை! கடந்த கால தவறுகளை சரி செய்துவிட்டோம்- அமித் ஷா தகவல்…

வங்கி மற்றும் நிதி துறையில் கடந்த கால தவறுகளை சரி செய்யும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து விட்டது. அதனால் யாரும் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.

மும்பையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: நாடு பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டும் வரும். தொழில்துறையினர் தங்களது கவலைகள் மற்றும் ஆலோசனைகளை அரசிடம் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி

2004 முதல் 2014 வரையிலான காலத்தில், வங்கி மற்றும் நிதி அமைப்பில் நடந்த தவறுகளை சரி செய்ய மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முடிந்து விட்டன. யாரும் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. 2014ல் உலக நாடுகளின் பொருளாதார பட்டியலில் 2 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலத்துடன் 11 இடத்தில் இருந்தோம். 

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு

அடுத்த 5 ஆண்டில் 2.9 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலத்துடன் 7 இடத்துக்கு முன்னேறினோம். 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவோம் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.  மேலும் 2024ம் ஆண்டுக்குள், தொழில்செய்வதற்கு உகந்த டாப் 30 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.