யாரும் உத்தமர்கள் அல்ல; துரைமுருகன் வீட்டில் ஐ.டி., ரெய்டு குறித்து கமல் கருத்து!

 

யாரும் உத்தமர்கள் அல்ல; துரைமுருகன் வீட்டில் ஐ.டி., ரெய்டு குறித்து கமல் கருத்து!

துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அதில், ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தெரிவித்தனர். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன

சென்னை: வருமானவரி சோதனை செய்பவர்களும், செய்யப்படுபவர்களும் உத்தமர்கள் அல்ல என  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக துரைமுருகன், கதிர் ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சியினர் தவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

it raid

இதனிடையே, துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அதில், ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தெரிவித்தனர். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

duraimurugan

துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, பள்ளியிலும் வருமானவரி சோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை நடத்துகின்றனர். அதேபோல், வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில்  கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் கல்லூர் ஒன்றில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு எடுத்துச் செல்லும்போது இந்த பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மான வரித்துறை சோதனை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், வருமானவரி சோதனை செய்பவர்களும், செய்யப்படுபவர்களும் உத்தமர்கள் அல்ல. வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என்றார்.

இதையும் வாசிங்க

இது சினிமா வசனம் அல்ல, என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான்: கமல் நெகிழ்ச்சி பேச்சு!