யாருடனும் இதுவரை கூட்டணி குறித்துப் பேசவில்லை: அன்புமணி ராமதாஸ் பதில்!

 

யாருடனும் இதுவரை கூட்டணி குறித்துப் பேசவில்லை: அன்புமணி ராமதாஸ் பதில்!

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கடலூர்: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரின் இரங்கல் நிகழ்ச்சியின் போது குருவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தனர். ஆனால், குரு மறைவிற்குப் பின் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து, குருவுக்கு மணிமண்டபம் கட்ட அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ramadoss

அதன்பின், காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரிடம், ராமதாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களுடைய குடும்பச் சொத்தான சென்னை டு கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 50 சென்ட் இடத்தை குருவிற்காக தானமாக வழங்கியுள்ளனர் .அந்த இடத்தில், நேற்று மணிமண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், முதல் கல்லை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.

ambumani

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘வரும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். கடந்த ஒன்பது மாதங்களாகத் தேர்தல் பணியாற்றி, கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் சென்று லட்சக்கணக்கான இளைஞர்களைக் கட்சியில் சேர்த்து தயார் நிலையில் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். யாருடனும் இதுவரை கூட்டணி குறித்துப் பேசவில்லை. கூட்டணி குறித்து எதுவும் கேள்விப்பட்டால் அது வதந்தியாகத்தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.