யாருக்கெல்லாம் கிரகங்கள் அதிர்ஷ்டம் தரும்

 

யாருக்கெல்லாம் கிரகங்கள் அதிர்ஷ்டம் தரும்

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்
5-8-19 (திங்கள்கிழமை)
நல்லநேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 5.15 முதல் 6 வரை
ராகுகாலம்
காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்
காலை 10.30 முதல் 12 வரை
சந்திராஷ்டமம்
அவிட்டம் காலை 7.15 வரை பிறகு சதயம்
பரிகாரம்
தயிர்
மேஷம்
அலுவலக ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவு திருப்பம் தரும். இன்று உங்களது நற்செயலுக்கு பலர் உறுதுணையாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று கிரகங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. புதன் உள்ளிட்ட கோள்களின் ஆதிக்கத்தால், உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும்.
மிதுனம்
வருமானத்திற்கு ஏற்ற புதிய வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும். உங்கள் கனவு நனவாகும் நாள். சந்திரன் உங்களுக்கு சாதகமாக உள்ளார்.
கடகம்
நீங்கள் பெரிதாக நம்பியிருந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர், பயம் வேண்டாம். தக்க சமயத்தில், நண்பர்கள், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தோல்வியிலும் மனம் தளரவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டிய நாள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திருப்பங்களால் நன்மை ஏற்படும் நாள். சூரியன் உள்ளிட்ட கோள்களின் பார்வையால், நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும்.
கன்னி
இன்று உங்களுக்கு நினைத்த காரியங்கள் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தங்குதடையின்றி நிறைவேறும் நாள். மனசஞ்சலத்தை தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்.
துலாம்
பொதுஇடங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய நாள்.  ஏதோ ஒன்று உங்கள் மனதை உறுத்திக்கொண்டு இருக்கும். வார்த்தைகளில் அன்பைக் கொண்டு வாருங்கள்.
விருச்சிகம்
யார் என்ன சொன்னாலும், நீங்கள் நினைத்ததே சரி என்ற மனநிலையில் இருப்பீர்கள். இதன்காரணமாக, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு
நண்பர்கள் தக்க சமயத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். நீண்ட நாள் கனவு திட்டத்திற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே துவங்குவீர்கள். வரும் நாட்களில் உங்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். எனவே, அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது.
மகரம்
அவசரப்பட்டு முதலீடு செய்வதைத் தவிர்த்து விடுங்கள். மன சஞ்சலத்துடன் இருப்பீர்கள். ஒரு செயலை முடிக்கும் முன்னரே, மற்றொரு செயலை செய்ய துவங்குவீர்கள், பின் வருத்தப்படுவீர்கள். நண்பர்களிடம் உதவியை எதிர்பார்ப்பீர்கள்.
கும்பம்
ஆரோக்கியம் கூடும். அதிக உணர்ச்சிவசப்படும் நாள். ஏதாவது ஒன்றை மறந்து வைத்து விட்டு அதை தேடுவதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவீர்கள். நான் செய்வதே சரி என்ற மனப்போக்கை கைவிடுவது நல்லது.
மீனம்
இன்று அதிகமாக பதட்டம் அடையாதீர்கள். தியானம் செய்வது நல்லது. எல்லாவற்றிற்கும் நம்மிடமே விடை உள்ளது என்பதை அறியாமல் செயல்படுவதால் சில இழப்புகளை சந்திப்பீர்கள். வாழ்வில் நிதானமான போக்கைக் கையாள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.