யாருக்கெல்லாம் காதலில் நிச்சய ஏமாற்றம் ஏற்படும்?

 

யாருக்கெல்லாம் காதலில் நிச்சய ஏமாற்றம் ஏற்படும்?

இன்றைய ராசிபலன்கள்
8-08-2019 (வியாழக்கிழமை)
நல்ல நேரம்
காலை 10.45 மணி முதல் 11.45வரை
ராகு காலம்
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை
எமகண்டம்
காலை 6 மணி முதல் 7.30 வரை
சந்திராஷ்டமம்
அஸ்வினி
பரிகாரம்
தைலம்  

மேஷம்
இன்று உங்கள் ராசிப்படி, நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். இன்று முதலீட்டை சேர்த்து, நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம். புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் ஏமாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம்
உடல் நலத்தில் ஏற்படுகிற பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது. இன்று மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள்.  இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை.
அதிர்ஷ்ட எண்: 4

மிதுனம்
நீண்டகாலமாக அனுபவித்து வந்த மன அழுத்தத்தில் இருந்து இன்று விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதற்கான சரியான நேரம் இது. நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும்.
அதிர்ஷ்ட எண்: 2

கடகம்
இன்று உங்கள் முன் வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகும்.
அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம்
உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4

கன்னி
இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும், வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள்.இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.
அதிர்ஷ்ட எண்: 3

துலாம்
நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். இன்றைய அதிர்ஷ்டமும் உங்கள் ராசிக்கு நாளின் பிற்பகுதியில் தான் ஆரம்பமாகின்றது.  ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும்.
அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம்
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும்.
அதிர்ஷ்ட எண்: 7

தனுசு
சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இன்று உங்களுக்கு கிடைக்கும் ஓய்வை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கமிஷன்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். காதலில் ஏமாற்றம் வரலாம்.
அதிர்ஷ்ட எண்: 4

மகரம்
வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் சவால் என்பதை உணருங்கள். அவசியமான பொருட்களை வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 4

கும்பம்
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும்.
அதிர்ஷ்ட எண்: 2

மீனம்
மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று உங்களுக்கு நிதியிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 8