யாருக்கெல்லாம் அரசாங்க வேலை கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்கு?

 

யாருக்கெல்லாம் அரசாங்க வேலை கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்கு?

குடும்பத்தில் நிம்மதி குறையும். வயிற்று உபாதைகள் எழலாம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லவும்.

இன்றைய ராசிபலன்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019
நல்ல நேரம்
காலை: 10 மணி முதல் 10.30 வரை
மாலை: 3 மணி முதல்  4 வரை
இராகுகாலம்
காலை  7:30 மணி முதல்  9 வரை
மாலை 
4:30 மணி முதல்  6 வரை
எமகண்டம்
காலை 10:30 மணி முதல்  12 வரை
மாலை 3 மணி முதல் 4:30 வரை
சந்திராஷ்டமம் – புனர்பூசம்
பரிகாரம் – தயிர்
மேஷம்
அரசு மூலமான புதிய பணிக்கான உத்திரவுகளை எதிர்பார்க்கலாம். ஆணையிடும் உயர்பதவிகள் கிடைத்து மனமகிழ்ச்சி பெருகும். புதிய திருப்பங்களால் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்.
ரிஷபம்
தொழில் விஷயங்களில் அரசு ஆதரவு இருக்கும். மனதில் அமைதி நிலவும். உளவாரப்பணி போன்ற தெய்வீக திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும்.
மிதுனம்
இன்று உங்களது ராசிக்கான கிரக நிலையின் படி நினைத்தபடி எதுவும் நடக்காது.  தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் தாமதப்படும்.
கடகம்
அரசால் அனுகூலங்கள் உண்டு. காதல் வெற்றி களிப்புத் தரும். மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். நேர்மையுடன் செயல்படுங்கள். பிறரிடம் பணிவோடு இருந்தால், பெறும் பயன்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
தனவரவு கூடும். எல்லா நலன்களும் உண்டாகும். இனிய பயணங்கள் இன்பம் தரும். நண்கர்களின் ஆதரவால் மனம் மகிழும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும்.
கன்னி
அக்கம் பக்கத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகளால் நிம்மதி குறையும். பயணத்தின் போது வேகத்தைக் குறைத்தால் விபத்தைத் தவிர்க்கலாம்.
துலாம் 
குடும்பத்தில் நிம்மதி குறையும். வயிற்று உபாதைகள் எழலாம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லவும். குளக்கரை, கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளில் எண்சரிக்கை தேவை.
விருச்சிகம்
மனைவியின் ஆதரவால் மனம் மகிழும் நாள். எதிர்பார்த்த இனங்களில் எதிர்பார்த்தபடி தடங்கலின்றித் தனவரவு அதிகரிக்கும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும்.
தனுசு
குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
மகரம்
எதிர்பார்த்தபடி வருமானம் அதிகரிக்கும். உறவுகளைச் சந்திப்பதனால் மனமகிழ்ச்சி ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவுவகைகள் ஆகியவையும் கிடைக்கும்.
கும்பம்
தனவரவு சுமாராக இருக்கும். இடமாற்றங்கள் இருக்கலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வரும் வாடிக்கையாளரிடம் இனிமையாகப் பேசினால் இலாபம் அதிகரிக்கும்.
மீனம்
தனவரவு அதிகரித்து மனத் திருப்தி ஏற்படும். வாக்கு வன்மையால் வளம் பெருகும். நோக்கும் இடமெல்லாம் முன்னேற்றத்திற்கான ஒளி மிக்க வழி தெரியும்.