யானைக்கும் அடி சறுக்கும்: மும்பையிடம் தோல்வியை தழுவிய சென்னை!

 

யானைக்கும் அடி சறுக்கும்: மும்பையிடம் தோல்வியை தழுவிய சென்னை!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி முதல் தோல்வியை தழுவி பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி முதல் தோல்வியை தழுவி பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

csk

 

ஐ.பி.எல் தொடரின் 15-வது லீக்  போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ்வென்ற  மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

சரிவிலிருந்து மீட்ட ஹர்திக் பாண்ட்யா

mi

தொடக்க ஆட்டக்காரரான களமிறங்கிய டி காக் 4  ரன்களிலும்,  ரோகித் சர்மா 13 ரன்களிலும், யுவராஜ் சிங் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க மும்பை அணி தடுமாற்றத்தைச் சந்தித்தது. இதையடுத்து களமிறங்கிய, ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் ஜோடி மும்பையைச் சரிவு பாதையிலிருந்து மீட்டது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. 

ஆரம்பத்தில் தடுமாற்றம்

mi

இதையடுத்து  களமிறங்கிய சென்னை அணி, ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தைக் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களான,  ஷேன் வாட்சன் 5 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியைக் கொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, தோனி உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேதர் ஜாதவ் மட்டும் 58 ரன்கள் குவித்தார். 

சென்னை அணியின்  முதல் தோல்வி

mi

இருப்பினும் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை தோல்வியைக் காணாமல் சிறப்பாக ஆடி வந்த சென்னை அணி, தன் முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இதனால் தரவரிசை பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மும்பை அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: வசமாக சிக்கிய தமிழச்சி தங்கபாண்டியன்… அடுத்தடுத்து மாட்டும் திமுக வேட்பாளர்கள்..!