யானைகளுக்காக நடத்தப்படும் ‘புத்துணர்வு முகாம்’ : ஆரவாரத்துடன் அனுப்பி வைக்கப்படும் கோவில் யானைகள்!

 

யானைகளுக்காக நடத்தப்படும் ‘புத்துணர்வு முகாம்’ : ஆரவாரத்துடன் அனுப்பி வைக்கப்படும் கோவில் யானைகள்!

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படும்.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படும். இது, கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும்.

ttn

இந்த முகாமில், கோவில் யானைகளுக்கு உள்ள மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வை போக்கி நடைப்பயிற்சி, சமச்சீர் உணவு, குளியல் உள்ளிட்டவற்றைக் கொடுத்து அந்த யானைகளை இளைப்பாறச் செய்ய வைக்கின்றனர். 48 நாட்கள் நடக்கும் இந்த முகாமிற்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களின் யானைகள், அதன் பாகன் மற்றும் 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

ttn

இதில் பங்கேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை, திண்டுக்கல் பழனி கோவில் யானை கஸ்தூரி உள்ளிட்ட யானைகள் ஆரவாரமாக அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 55 வயதாகும் கஸ்தூரி என்னும் யானை 13 ஆவது முறையாக அந்த புத்துணர்வு முகாமுக்குச் செல்கிறதாம். இன்று தொடங்கவுள்ள அந்த முகாமிற்கு அனைத்து யானைகளும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.