யாகம் மட்டும் நடத்தியே ஆட்சியைப் பிடிக்கவிரும்பும் ரஜினியின் அண்ணன்…

 

யாகம் மட்டும் நடத்தியே ஆட்சியைப் பிடிக்கவிரும்பும் ரஜினியின் அண்ணன்…

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ்  நேற்று சாமி தரிசனம் செய்தார்.

சமீபகாலமாக கோயில் கோயிலாக சென்று கொண்டுகொடிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிதாகச் செல்லும் கோயில்களில் யாகம் வளர்த்து வழிபட ஆரம்பித்திருப்பதாகவும் அந்த யாகம் ரஜினி ஆட்சியைப் பிடிப்பது சம்பந்தமானது என்கிறார்கள் சம்பந்தப்பட்ட பூசாரிகள்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ்  நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,’அரசியலுக்கு வருவதை இனியும் தள்ளிப்போடும் எண்ணம் ரஜினிக்கு இல்லவே இல்லை.வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டார். 

rajini

பிரதமர் மோடியின் செயல்பாடுகளில் குறைசொல்ல ஒன்றுமே இல்லை. அவரது ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது. கைவசமிருக்கிற படங்களை முடித்துவிட்டு மிக விரைவில் ரஜினி அரசியலில் குதிப்பது உறுதி. இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்க உள்ளது. இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் அப்போது இருக்கமாட்டார்கள்’என்றார்.

தம்பி கட்சியே ஆரம்பிக்காத நிலையில் சத்யநாராயணா இப்படி அதிரடியாக இறங்கியுள்ளதால் அவரது வழியிலேயே ரஜினி முதல்வராக வேண்டி, சிறப்பு யாகம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள் நடிகர் ரஜினிகாந்தின் விசுவாசிகள். இந்தநிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா, நடராஜர் ஆலயத்தில் சாந்தி யாகம் நடத்தினார். யாகத்தில் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவரும், ரஜினிகாந்த் மாப்பிள்ளையுமான சந்திரகாந்த் கலந்து கொண்டார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரஜினி நீண்ட ஆயுள் பெறவும், 2021 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக கூறினர்.