ம.பி-யில் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிக்கும் காங்கிரஸ்… பா.ஜ.க சொல்கிறது!

ம.பி-யில் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிக்கும் காங்கிரஸ்… பா.ஜ.க சொல்கிறது!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி பெங்களூரு சொகுசு ஹோட்டலில் தங்க வைத்துள்ளது பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் பேச கூட பா.ஜ.க அனுமதிக்க மறுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருப்பதன் மூலம் குதிரை பேரத்தை நடத்தக் காங்கிரஸ் துடிக்கிறது என்று பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி பெங்களூரு சொகுசு ஹோட்டலில் தங்க வைத்துள்ளது பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் பேச கூட பா.ஜ.க அனுமதிக்க மறுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

madhy-acong

இந்த நிலையில், மத்தியப் பிரதேச அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும்படி பா.ஜ.க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதில் அளித்த காங்கிரஸ், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜ.க, பெங்களூருவில் உள்ள 22 எம்.எல்.ஏ-க்களையும் உச்ச நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்த தயாராக உள்ளதாக தெரிவித்தது. ஆனால், இதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

mlas-in-bus

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என்று காங்கிரஸ் கோரியிருப்பதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌகான் கூறுகையில், “எதற்கு அவர்களுக்கு அவகாசம் வேண்டும்? குதிரை வணிகத்தில் ஈடுபடவா? தற்போது அவர்களுக்கு பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை என்பதை அவர்கள் தெரிந்துள்ளார்கள். சில இட மாறுதல்கள் செய்ய அவர்கள் கேட்டிருக்கும் சாக்கு இது” என்றார்.

madhya pradesh-bjp-leader

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து குதிரை பேரத்தை செய்த பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியைப் பார்த்து குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிப்பதாக கூறியிருப்பது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.