ம.பி சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளருக்கு கொரோனா! – அதிர்ச்சியில் எம்.எல்.ஏ-க்கள்

ம.பி சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளருக்கு கொரோனா! – அதிர்ச்சியில் எம்.எல்.ஏ-க்கள்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை நிரூபிக்க இருந்த அன்று சட்டப் பேரவையில் நிகழ்ச்சிகளை குறிப்பெடுக்க வந்த செய்தியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது. அவை நிகழ்வுகள் பற்றி செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் அங்கு இருந்தனர். அப்போது முதல்வர் கமல்நாத் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று தகவல் அறிந்து முதல்வரின் பேட்டிக்கு நிருபர்கள் சென்றனர். பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவராமல், ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். 

kamalnath

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சென்று செய்தி சேகரித்த நிருபர் ஒருவருக்கு தற்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பத்திரிகையாளரின் மகள் சமீபத்தில்தான் லண்டனிலிருந்து போபால் வந்துள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பத்திரிகையாளரின் மனைவி, மகன், வீட்டில் வேலை செய்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவர்களும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

kamalnath

கொரோனா பாதிப்புடன் அந்த நிருபர் சட்டமன்றம், முதலமைச்சர் அலுவலகம் என்று பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இதன் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா பரவியது என்று தெரியவில்லை. இதை எப்படி கண்டறிவது என்று தெரியாமல் சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். சட்டப் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.