மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆனது

 

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆனது

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

டெல்லி: மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த மாதம் தொடங்கும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இவை அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஆகிய மாடல்கள் இந்த ஜி7 சீரிஸில் அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தொடர்பான விவரங்கள் கீக்பென்ச் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் ஆகியவை இடம்பெறும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் எட்ஜ்-டு-எட்ஜ் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 12 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, 16 எம்.பி செல்ஃபி கேமரா, வயர்லெஸ்  சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.