மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

 

மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

பிரேசில் நாட்டில் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த மோட்டோரோலா நிறுவனத்தின் ‘மோட்டோ ஜி7 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த ஜி7 சீரிஸில் இடம்பெற்றுள்ளன. இந்த 4 மாடல்களிலும் பின்புறம் விரல்ரேகை சென்சார், யு.எஸ்.பி டைப்-சி போர்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் இந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் இந்த மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி7 பிளஸ் விலை 340 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,320) என்று தொடங்குகிறது. அதேபோல மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விலை 299 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,360) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ ஜி7 பவர் விலை 249 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,785) என்றும், மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,215) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜி7 ஸ்மார்ட்போன் மாடல்கள் நிறங்கள்:

மோட்டோ ஜி7 பிளஸ் – டீப் இன்டிகோ மற்றும் விவா ரெட்

மோட்டோ ஜி7 – செராமிக் பிளாக் மற்றும் க்ளியர் வைட்

மோட்டோ ஜி7 பவர் – மரைன் புளு

மோட்டோ ஜி7 பிளே – டீப் இன்டிகோ மற்றும் ஸ்டேரி பிளாக்

மோட்டோ ஜி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 636 14 என்.எம். பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 16 எம்.பி +  5 எம்.பி டுயல் பிரைமரி கேமரா, டுயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 12 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டுயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 27 வாட் டர்போ சார்ஜிங் ஆகிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.24 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டுயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 12 எம்.பி +  5 எம்.பி டுயல் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி ஃபிளாஷ், 8 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டுயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 15 வாட் டர்போ சார்ஜிங் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மோட்டோ ஜி7 பவர் சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, டுயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 12 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டுயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 15 வாட் டர்போ சார்ஜிங் ஆகிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.

மோட்டோ ஜி7 பிளே சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, டுயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 13 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி செல்ஃபி கேமரா,  விரல்ரேகை சென்சார், டுயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் டர்போ சார்ஜிங் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.