மோட்டோரோலா மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

மோட்டோரோலா மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிப்பு

மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்மார்ட்போனை மடிக்க கூடிய அம்சம் இடம்பெற்றுள்ளது. 6.2 இன்ச் மடங்கக்கூடிய OLED சினிமா விஷன் டிஸ்பிளேவை பாதியாக மடிக்க முடியும். இதுதவிர ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது திரை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை குயிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என மோட்டோரோலா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

razr

இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.1,08,230 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 1500 அமெரிக்க டாலர்களாகும். இந்நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு வருகிற 26-ஆம் தேதியும், விற்பனை பிப்ரவரி 6-ஆம் தேதியும் தொடங்கவிருக்கிறது. மேலும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 16 எம்.பி பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 2510 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைஃபை ஆகிய சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.