மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

டெல்லி: மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, ஒன்பவர் மாடலில் FHD பிளஸ் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் சிறப்பம்சங்கள்:

– 5.9 இன்ச் 1520×720 பிக்சல் 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்

அட்ரினோ 506 GPU

– 4 ஜிபி ரேம்

– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0

– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

– 8 எம்பி செல்ஃபி கேமரா

– P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

கைரேகை சென்சார்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் 19:9 ஃபுல் ஹெச்.டி பிளஸ் ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே

– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்

அட்ரினோ 509 GPU

– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்

– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா

– 8 எம்பி செல்ஃபி கேமரா

கைரேகை சென்சார்

– P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,780) என்றும் ஐரோப்பியா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.