மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

 

மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி உள்ளிட்டவைகளை செலுத்த ஏப்ரல் 10 ஆம் தேதியே  கடைசி தேதியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் 
ஆண்டு வரிக்கான காலக்கெடு மே 15 ஆம் தேதி வரை நீட்டித்தது. ஆனால் தற்போது பொதுமுடக்கம் மே.17 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் ஆண்டு வரிக்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில்கொண்டு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வாகன வரி

தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக மின்சார கட்டணம், வாகன வரி, வருமான வரி எனக் கட்டணங்கள், வரிகளைச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளையும், கால அவகாசங்களையும் தமிழக அரசு அறிவித்துவருவது குறிப்பிடதக்கது.