மோடி வெளிநாட்டு பயணத்திற்கு ஆன செலவு இவ்வளவா?

 

மோடி வெளிநாட்டு பயணத்திற்கு ஆன செலவு இவ்வளவா?

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு இதுவரை ரூ.2,012 கோடி செலவாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு இதுவரை ரூ.2,012 கோடி செலவாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவையில் கடந்த வெள்ளியன்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பினோய் விஸ்வம் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகக் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அப்போது, பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என அவர் கேட்டார். இதற்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ‘பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 84 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இதற்காக அரசுக்கு ₹2012 கோடி செலவாகியுள்ளது. அவர் பயணம் செய்யும் ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்பு செலவு மட்டும் ₹1583 கோடி’ என்று  தெரிவித்தார்.