மோடி விமானத்தை உள்ளே விட முடியாது…… மீண்டும் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்

 

மோடி விமானத்தை உள்ளே விட முடியாது…… மீண்டும் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்

பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா செல்லும் போது அவர் பயணிக்கும் விமானத்தை தங்களது வான்வெளியில் பறக்க அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் மீண்டும் மறுத்து விட்டது. கடந்த சில வாரங்களில், தொடர்ந்து 3வது முறையாக இந்திய தலைவர்கள் செல்லும் விமானங்களை தங்களது வான்பரப்பில் பறக்க பாகிஸ்தான் அனுமதிக்க மறுத்துள்ளது

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது முதல் பாகிஸ்தான் இந்தியா மீது கடும் வெறுப்பில் உள்ளது. நம் நாட்டுடான வர்த்தக உள்ளிட்ட உறவுகளை துண்டித்து கொண்டது. மேலும் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நிகழ்வுகளில் எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தன. இதனால் பாகிஸ்தான் மேலும் கடுப்பானது. இந்திய தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் தங்களது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை போட்டது.

பாகிஸ்தான் வான்வெளி

கடந்த மாதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் பாகிஸ்தான் தனது வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இந்நிலையில் சவுதி மன்னரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு 2 நாள் அரசு பயணமாக செல்ல உள்ளார். 

ஷா முகமது குரேஷி

இதற்காக பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறந்து செல்ல அனுமதி அளிக்கும்படி அந்நாட்டிடம் முறைப்படி கோரிக்கை விடப்பட்டது. வழக்கம் போல் இந்த முறையும் பாகிஸ்தான் அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமைமீறல்கள் காரணமாக பிரதமர் மோடியின் விமானம் எங்களது வான்பரப்பில் பறக்க அனுமதி கொடுக்க முடியாது. இது குறித்து இந்திய தூதரிடமும் தகவல் தெரிவித்து விட்டோம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.