மோடி மட்டுமில்லை, ஜேம்ஸ்பாண்ட் வருகையும் தள்ளிப்போகிறது கொரோனா வைரஸால்!

மோடி மட்டுமில்லை, ஜேம்ஸ்பாண்ட் வருகையும் தள்ளிப்போகிறது கொரோனா வைரஸால்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புரூசெல்ஸ் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதை இந்திய பத்திரிகைகள் இன்று கேலி செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஆனானப்பட்ட ஜேம்ஸ்பாண்டே அந்த கொலைகார கொரோனா வைரஸைப் பார்த்து பயந்து பின்வாங்கி இருப்பதாக ஹாலிவுட்டிலிருந்து செய்திகள் வந்திருக்கின்றன. 

corona-67

‘நோ டைம் டு டை’ என்கிற பெயரில் எம்.ஜி.எம், யுனிவர்சல், மைக்கேல் ஜ்வல்சன், பார்பரா புரூகெல்லி இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் டேனியல் கிரெய்க் நான்காவது முறையாக ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கிறார். இந்த மாத இறுதியில் வெளிவர இருந்த இந்தப் படம் ஏழு மாதம் பதுங்கியிருந்து நவம்பர் 12-ம் தேதி இங்கிலாந்திலும், 25-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். 

no time to die

நவம்பர் இறுதியில் வில் ஸ்மித் நடிக்கும் ‘கிங் ரிச்சர்ட்’ டிஸ்னியின் ‘ரேயா தி லாஸ்ட் டிராகன்’ ஆகிய படங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் மோத இருக்கிறது. சராசரியாக ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் இந்தியப் பணத்தில் எழுபதாயிரம் கோடி வசூலிக்கும். ஆனால் அந்த ஜேம்ஸ்பாண்டுக்கு கொரோனா வைரஸுடன் மோத தைரியம் இல்லாத பொழுது, ஒரு ஏழைத் தாயின் மகன் என்ன செய்வது?