மோடி பிறந்தநாள் விழாவின்போது வாயு நிரப்பிய பலூன் வெடித்து விபத்து!

 

மோடி பிறந்தநாள் விழாவின்போது வாயு நிரப்பிய பலூன் வெடித்து விபத்து!

அம்பத்தூரில் மோடி பிறந்தநாள் விழாவின்போது வாயு நிரப்பிய பலூன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்தநாளான இன்று இந்தியா முழுவதும் உள்ள பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள், பேருந்து பயணிகள், கடை வியாபாரிகள், பாதசாரிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

மோடி பிறந்தநாள் விழாவின்போது வாயு நிரப்பிய பலூன் வெடித்து விபத்து!

இந்நிலையில் அம்பத்தூர் அடுத்த பாடியில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததில் நிகழ்ச்சியில் பறக்கவிடப்பட்டிருந்த 200 கேஸ் பலூன்கள் மீது தீப்பொறி பட்டு சிதறியது. அதனால் அருகில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த சிறுவர்கள் மீது பலூன்கள் பட்டதால் எரிச்சல் ஏற்பட்டு ஆவதிக்குள்ளாகினர்.