மோடி படத்துக்கு தடையில்லை; பாஜக ஆதரவாக செயல்படும் நீதிமன்றம்

 

மோடி படத்துக்கு தடையில்லை; பாஜக ஆதரவாக செயல்படும் நீதிமன்றம்

தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களும் பாஜக ஆதரவாய் செயல்படுகிறது என பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் வகையிலேயே அதன் செயல்பாடுகள் இருக்கிறது.

ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடைவிதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

high

மக்களவை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் மோடியை ஆதரிக்கும் விதமாக பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாக இருக்கிறது என திமுக தரப்பு குற்றம்சாட்டியது. தேர்தல் ஆணையத்திடம் திமுகவும் காங்கிரஸும் இந்த படத்துக்கு தடை கோரியது.  அதேபோல் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

vivek

இன்று இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மோடி படத்துக்கு தடைவிதிக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களும் பாஜக ஆதரவாய் செயல்படுகிறது என பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் வகையிலேயே அதன் செயல்பாடுகள் இருக்கிறது.

modi

பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் மோடியின் அரசியல் பயணத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மோடிக்கு ஆதரவாய் எடுக்கப்பட்ட படம் என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மோடி படத்தின் டிரெய்லரும் அதை உணர்த்தும் வண்ணமே இருந்தது.  அறிவித்தபடி ஏப்ரல் 5-ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்