மோடி டெபாசிட் செய்தார் என்று நினைத்தேன்! – வங்கி கணக்கில் வந்த பணத்தை செலவு செய்தவரின் பலே ஸ்டேட்மெண்ட்

மோடி டெபாசிட் செய்தார் என்று நினைத்தேன்! – வங்கி கணக்கில் வந்த பணத்தை செலவு செய்தவரின் பலே ஸ்டேட்மெண்ட்

தன்னுடைய வங்கிக் கணக்கில் தவறுதலாக டெபாசிட் ஆன பணத்தை எடுத்து செலவு செய்த நபரிடம் இது பற்றி விசாரித்தபோது, மோடி டெபாசிட் செய்தார் என்று நினைத்தேன் என்று கூறியது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மத்தியபிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் என்பவர் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளார். அதே வங்கியில் ரோனி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் என்பவரும் வங்கிக் கணக்கை வைத்துள்ளார். வங்கி அதிகாரிகள் குளறுபடியால் இவர்கள் இருவருக்கும் ஒரே கணக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது.

sbi

இந்த நிலையில், ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் வேலை காரணமாக ஹரியானா மாநிலம் சென்றுவிட்டார். அங்கு அவர் சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக தன்னுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வந்துள்ளார். ஆனால், வங்கிக் கணக்கில் எவ்வளவு உள்ளது என்று எல்லாம் அவர் சரிபார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தன்னுடைய வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் ஆவதால் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளார் ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும். பணத்தை எடுத்து செலவு செய்ய ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், ஊர் திரும்பிய ரூராய் ஹூக்கும் சிங் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 35,400 மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அவர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது. 

account

இது குறித்து வங்கி மேலாளரை சந்தித்து புகார் அளித்தார். அப்போது வங்கிக் கணக்கை பரிசோதனை செய்த அதிகாரிகள், நீங்கள்தான் இந்த இந்த தேதிகளில் பணத்தை எடுத்துள்ளீர்கள் என்று ஸ்டேட்மெண்ட்டை எடுத்துக் காட்டியுள்ளனர். நான் ஊரிலேயே இல்லை… நான் பணத்தை எடுக்கவே இல்லை என்று ஹூக்கும் சிங் சாதித்துள்ளார். அதனால், எந்த எந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது, ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது டெபாசிட் ஆனது ஹரியானா என்பதும் செலவு செய்யப்பட்டது மத்தியபிரதேசம் என்பதும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது தவறு நடந்தது புரிந்தது.

account

உடனடியாக, ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் டெபாசிட் செய்ததை ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங்கை செலவு செய்து வந்துள்ளார் என்பதும், இருவருக்கும் ஒரே கணக்கு எண் வழங்கப்பட்டதும் தெரிந்தது. ரோனி கிராமத்துக்குச் சென்று ஹூக்கும் சிங்கை சந்தித்து நடந்த தவறை குறிப்பிட்டு ஏன் இதை வங்கியில் தெரிவிக்கவில்லை, அக்கவுண்டில் இருந்து எடுத்த பணம் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூலாக, “பிரதமர் மோடிதான் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்துவோம் என்று கூறியிருந்தாரே. அதனால், அவர்தான் டெபாசிட் செய்கிறார் என்று நினைத்தேன். எனக்கு தேவை இருந்ததால் அந்த பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இப்போது, பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்று தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.